அநுர குமாரவுக்கு வாக்களிக்க முன் சிந்தியுங்கள்
திசைகாட்டிக்கும் அநுர குமாரவுக்கும் வாய்ப்பளிக்கச் சென்று இலங்கையின் இளைஞர் சமூகம் தமது எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை இழக்க வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார்.
மீண்டும் வரிசை யுகத்தை உருவாக்கும் அநுரகுமாரவின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து தான் கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு 03 நாட்கள் கடந்தும் இதுவரை பதில் அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொருளாதாரக் கொள்கை இல்லாத திசைகாட்டியிடம் தங்கள் எதிர்காலத்தை ஒப்படைக்க வேண்டுமா என்பதை இளைஞர்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாத்து வரிசையில் நிற்கும் மற்றொரு யுகத்திற்கு இடமளிக்காமல், மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதே தனது தேவை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டு மக்களின் சுமையை அதிகரிக்கத் தயாராக இருக்கும் ஒரு குழுவினரிடம் நாட்டின் பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
புத்தளத்தில் நடைபெற்ற 'ரணிலால் இயலும்' பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
Post a Comment