ஆபிரிக்காவுக்கு வெளியே முதல் முதலில் சுவீடனில் பரவியது குரங்கம்மை!!


ஆபிரிக்கா கண்டத்திற்கு வெளியே முதல் முதலாக சுவீடனில் குரங்கம்மை (mpox) வைரல் நோய் பரவி வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என சுவீடன் பொது சுகாதார நிறுவனம் நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

கிளாட்-1 (clade-1) என்று அழைக்கப்படும் மிகவும் மோசமான வகையான குரங்கம்மையே சுவீடனில் ஒருவருக்கு பரவியுள்ளது என்பது உறுதி  செய்துள்ளோம் என சுவீடன்  சுகாதார மற்றும் சமூக விவகார அமைச்சர் ஜாகோப் ஃபோர்ஸ்மெட் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் காங்கோ ஜனநாயகக் குடியரசில் கிளேட் 1பி வைரஸ் பரவி வருகிறது. 

சுவீடனில் உள்ள நபர் "பாக்ஸ் கிளேட் 1 இன் பெரியளவில் பரவி உள்ள ஆப்பிரிக்காவின் பகுதிக்குச் பயணம் செய்தபோது பாதிக்கப்பட்டார் என்று அரச தொற்றுநோயியல் நிபுணர் மேக்னஸ் கிஸ்லென் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தார். 

சுவீடன் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியவும், தனிமைப்படுத்தவும், பாதுகாப்பாக சிகிச்சையளிக்கவும் தயாராக உள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கம்மை என்றால் என்ன?

Monkeypox (Mpox) குரங்கம்மை முதன் முதலில் 1970 ஆண்டு கொங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் குரங்குகளில் இருந்து உருவாகிறது. இதனால் இந்த நோயை குரங்கம்மை (Monkeypox) என்று அழைத்தனர்.

இது காய்ச்சல், தசைவலி மற்றும் பெரிய கொதிப்பு போன்ற தோல் புண்கள் உள்ளிட்ட அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இதற்கு தடுப்பூசிகள் உள்ளன. இது முதலில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் போது, ​​​​அது நெருங்கிய உடல் தொடர்பு மூலம் மனிதர்களிடையே பரவுகிறது.

கொங்கோ ஜனநாயக குடியரசு முதல் முதலில் கண்டறியப்பட்ட அதன்  அருகில் உள்ள நாடுகளுக்குப் பரவியது என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

இந்த ஆண்டு கொங்கோ ஜனநாயக குடியரசில் இந்த ஆண்டு 548 பேர் உயிரிழந்துள்ளனர். 15,664 பேர் இந்த தொற்று நோய்க்கு உள்ளாகிய வழக்குகள் பதிவாகியுள்ளன.

கிட்டத்தட்ட 100 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கொங்கோ ஜனநாயக குடியரசில்மொத்தம் 26 மாகாணங்களைக் கொண்டது.

குரங்கம்மைக்கு எதிரான தடுப்பூசிக்கான தேசிய மூலோபாயத் திட்டத்தை அரசாங்கம் அமைத்துள்ளது, அத்துடன் எல்லைகள் மற்றும் சோதனைச் சாவடிகளில் நோய்க்கான கண்காணிப்பை மேம்படுத்துகிறது.  

No comments