ஸ்பெனினுக்குள் திடீரெனப் புகுந்த பிரிவினைவாத் தலைவர்: தேடுதல் வேட்டையில் களமிறங்கிய காவல்துறை!!


ஸ்பெயின் கட்டலான் பகுதியின் சுதந்திரத்திற்கான முயற்சியில் தோவ்வியடைந்ததைத் தொடர்ந்து முன்னாள் கட்டலான் பிரிவாதத் தலைவர் கார்லஸ் புய்க்டெமாண்ட் பெல்ஜியத்தில் அரசியல் தஞ்சம் அடைந்தார்.

இவர் திடீரென ஸ்பெயினுக்குத் திருப்பினார். அவர் பார்சிலோனாவில் ஒரு உரையை நிகழ்த்திவிட்டு காணாமல் போயுள்ளார். இவரைப் பிடிக்க ஸ்பெயின் காவல்துறை அதிகாரிகள் ஒரு பெரும் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

61 வயதான கார்லஸ் புய்க்டெமாண்ட் 2017 இல் கட்டலான் சுதந்திரத்திற்கான முயற்சி தோல்வியுற்றதுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் ஸ்பெயினால் தேடப்படுகிறார்.

கடந்த 24 மணி நேர பரபரப்பான நிலையில் அவர் மீண்டும் பெல்ஜியம் திரும்பியுள்ளதாக அவரது கட்சியின் பொதுச் செயலாளர் ஜோர்டி துருல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டில் புய்க்டெமாண்ட் உட்பட கட்டலோனியாவின் சுதந்திர சார்பு தலைவர்கள் ஒரு வாக்கெடுப்பை ஏற்பாடு செய்தனர். இந்த வாக்கெடுப்பு ஸ்பெயினின் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. வாக்கெடுப்பின் பின்னர் கட்டலான் பிராந்தியம் சுதந்திரநாடாக அறிவித்தது.

ஸ்பெயின் அப்பிராந்தியத்தை தனது நேரடி ஆட்சிக்குள் கொண்டுவந்தது. புய்க்டெமாண்ட் பெல்ஜியத்திற்கு தப்பி ஓடினார். அவர் கடந்த பல ஆண்டுகளாக பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸில் வசித்து வருகிறார்.

ஏழு ஆண்டுகால பெல்ஜியத்தில் இந்த பின்னர்  அவர் ஸ்பெயின்  திரும்பினார். பார்சிலோனாவில் உள்ள கட்டலான் பாராளுமன்றம் அருகே கூடியிருந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களிடம் "சுதந்திர கேட்டலோனியா வாழ்க" என கூறினார். நாங்கள் இன்னும் இங்கே இருக்கிறோம் என்பதை உங்களுக்கு நினைவூட்டுவதற்காக தான் திரும்பி வந்ததாகக் கூறினார்.

ஒரு வாக்கெடுப்பு நடத்துவது ஒரு குற்றமல்ல, அது ஒருபோதும் குற்றமாகாது என புய்க்டெமொன்ட் கூறினார்.

கார்லஸ் புய்க்டெமாண்ட் எங்கிருக்கிறார் என்பது குறித்து தன்னிடம் எந்தத் தகவலும் இல்லை என்றும், அவரை மிகப் பொருத்தமான இடத்தில் வைத்து கைது செய்வதே எங்கள் திட்டம் என்றும் கட்டலான் காவல்துறையின் தலைமை ஆணையர் மோசோஸ் டெஎஸ்குவாட்ரா எக்குவாட் சலென்ட் (Mossos d'Esquadra, Eduard Salent) இன்று வெள்ளிக்கிழமை கூறினார்.

புய்க்டெமொன்ட் தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை மோசோஸ் டெஎஸ்குவாட்ரா எக்குவாட் சலென்ட் உறுதிப்படுத்தினார்.

பார்சிலோனா பாராளுமன்றத்திற்கு வெளியே கார்லஸ் புய்க்டெமாண்ட் ஆச்சரியமாகத் தோன்றுவதற்கு முன்னர் அவர் கடந்த செய்வாய்க்கிழமை முதல் பார்சிலோனாவில் இருந்தார் எனவும் அதேநாள் இரவு பார்சிலோனாவில் இரவு உணவு சாப்பிட்டதாகவும், புதன் மற்றும் வியாழன் முழுவதும் அப்பகுதியில் கழித்ததாகவும் அரவது கட்சியின் பொச்செயலாளர் துருல் கூறினார். 

இவரைக் கைது செய்ய காவல்துறையினர் பெரும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் வீதித் தடைகள் அமைத்து ஒவ்வொரு வாகனங்களையும் காவல்துறையினர் துருவித் துருவித் தேடிவருகின்றனர்.

No comments