2030க்குள் சீனா 500 தொடக்கம் 1000 அணு குண்டுகளைத் தயாரிக்கும்: மூலோபாயத்தை வகுக்கும் அமெரிக்கா!


ரஷ்யா, வட கொரியா மற்றும் குறிப்பாக சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்காவின் அதிகரித்து வரும் கவலையை அடுத்து சீனாவை மையமாக வைத்து அணுசக்தி மூலோபாயத் திட்டம் ஒன்றுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அங்கீகாரம் அளிக்கிறார் என நியூயோர்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் சீனாவின் வளர்ந்து வரும் வளர்ச்சி அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. அதனை அடியோடு அழிக்க எந்த எல்லைக்கும் செல்லத்தயாராக உள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் சீனா தனது அணு ஆயுதங்களின் அளவை 500 முதல் 1,000 வரை அதிகரிக்கக்கூடும் என்று பென்டகன் நம்புகிறது. அதே நேரத்தில் ரஷ்யாவில் தற்போது 4,000 அணு ஆயுதங்கள் உள்ளன என அமெர்காவின் ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் நிர்வாக இயக்குனர் டேரில் கிம்பால் கூறியுள்ளார்.

2035 ஆம் ஆண்டில்  சீனாவின் இராணுவம் தொடர்ந்து வளரும் என்று வெளிப்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கின் மூலோபாயம் ரஷ்யாவுடனான வரம்பற்ற கூட்டாண்மையை அதன் வளர்ச்சிக்கு அடிப்படையாக கருதுகிறது.

இந்நிலையில்தான் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு இரகசிய மூலோபாய அணுசக்தி திட்டத்திற் பச்சைக்கொடி  காட்டினார். து முதல் முறையாக, சீனாவின் அணு ஆயுதங்களை விரிவாக்குவதில் கவனம் செலுத்துவதற்கான வாஷிங்டனின் மூலோபாயத்தை மறுவடிவமைத்தது தி நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்தது.

No comments