சி.வி தூக்கினார் பேனையை!
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர அரச அதிபர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரி, அவசர கடிதமொன்று சி.வி.விக்னேஸ்வரனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர அரச அதிபர்களின் நியமனம் தொடர்பில் ஏற்கனவே சி.வி.விக்னேஸ்வரனால் ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதப்பட்டிருந்த போதும் அதனை நிறைவேற்றாது பதில் அரச அதிபர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை முதல் 3 நாள் பயணமாக வடக்கு வந்துள்ள ஜனாதிபதி ரணிலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க உள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ளதால் அவசரமாக நிறைவேற்றக் கூடிய சில கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் அவர்கள் முன்வைக்கவுள்ளதாக தெரியவருகிறது.
இத்தகைய பின்புலத்திலேயே நிரந்தர அரச அதிபர்களை நியமிக்குமாறு கோரி அவசர கடிதம் சி.வி.விக்னேஸ்வரனால் ஜனாதிபதிக்கு இரண்டாவது தடவையாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment