நாமல் வரக்கூடாது:ஈபிடிபி கம்பு தூக்கியது!
வடக்கு- கிழக்கு இணைப்புக்கு இடமில்லை, காணி பொலிஸ் அதிகாரம் வழங்கமாட்டோம் என்று கூறுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச வடக்கு,கிழக்கு பிரதேசங்களுக்கு தேர்தல் பிரச்சாரங்களுக்காக வரவேண்டாம் என முன்னாள் பங்காளிகளான ஈபிடிபி தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஏனைய அரசியல் கட்சிகளைப் போன்று, தேர்தல் நேரத்தில் ஆதாயம் பெறுவதற்காக நாங்கள் எங்கள் கொள்கைகளை மாற்றுவதில்லை.
மாகாண சபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்க முடியாது. வடக்கு கிழக்கையும் இணைக்க முடியாது. அவ்வாறு செய்தால் நாடு பிளவடையும் எனவே நாட்டை பிரிக்க நான் அனுமதிக்கமாட்டேன். வெளிப்படையாக அதனையே கூறுகிறேன் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Post a Comment