நட்வர் சிங் காலமானார்!



இந்திய இலங்கை உடன்படிக்கை உருவாக்கத்தின் போது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியுடன் இணைந்து செயற்பட்டவரும் திரைமறைவு நடவடிக்கைகள் குறித்து நன்கறிந்தவருமான இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வர் சிங் காலமானார்.

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நட்வர் சிங் நேற்று சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 95.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின் போது 2004-2005 காலகட்டத்தில் நட்வர் சிங் வெளியுறவுத் துறை அமைச்சராக பணிபுரிந்தார். பாகிஸ்தானுக்கான தூதராகப் பணியாற்றிய நட்வர் சிங் 1966 முதல் 1971 வரையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியிலும் பணிபுரிந்துள்ளார்

No comments