காஷ்மீரில் பதுங்கித் தாக்குதல்: நான்கு இந்திப் படையினர் பலி!!
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் கிளர்ச்சியார்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு இந்திய இராணுவ அதிகாரி உட்பட நான்கு இந்தியப் படையினர் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இதேநேரம் காயமடைந்த இந்திய காவல்துறை அதிகாரியும் உயிரிழந்துள்ளார் என ஏஎவ்பி செய்தி நிறுவனம் பாதுகாப்பு ஆதாரத்தோடு மேற்கொள்ளிட்டு இச்செய்தியை வெளியிட்டது.
இந்துக்கள் அதிகமாக வாழும் இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட் ஜம்மு பிரிவில் உள்ள தோடா மாவட்டத்தின் காடுகளில் இச்சண்டை நடந்தது.
இந்தியப் படையினர் நேற்றுத் திங்கட்கிழமை மாலை ஜம்மு பகுதியில் பிராந்தியத்தின் தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து தென்கிழக்கே 135 கிலோமீட்டர் (85 மைல்) தொலைவில் ஒரு நடவடிக்கையைத் தொடங்கினர்.
ரோந்து நடவடிக்கையின் போது கிளர்ச்சியார்கள் பதுங்கியிருந்து தாக்குதலை நடத்தினர் இதானல் இரு தரப்பிற்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது என இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேர் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலிருந்து இந்திய எல்லையைக் கடக்க முயன்றபோது அவர்களைக் கொன்றதாக இந்திய இராணுவம் கூறிய ஒரு நாள் கழித்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
Post a Comment