பூதவுடலுடன் அரசியல்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் நாளை வியாழக்கிழமை கொழும்பில் இருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படவுள்ள நிலையில் நிகழ்வுகளிற்கு யார் தலைமை தாங்குவதென்ற உட்கட்சி மோதல் மூண்டுள்ளது.
யாழ்.நகரிலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதன்பின்னர் அன்னாரின் பூதவுடல் விமானம் மூலம் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.
முன்னதாக இரா.சம்பந்தனின் பூதவுடல் நேற்றுக் காலை முதல் இன்று மதியம் வரை பொரளை ஏ.எப். றேமண்ட்ஸ் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பிற்பகல் நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பூதவுடலிற்கு நேற்று முதல் இன்று வரை இலங்கை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள பூதவுடல் மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை திருகோணமலையில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைஇல்லத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று மாலை 4 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காகத் திருகோணமலை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
இந்நிலையில் சுமந்திரன் அணி உடலத்துடன் அரசியலிற்கு புறப்பட மார்ட்டின் வீதி அணியோ தனித்து நின்றுவருகின்றது.
Post a Comment