குகதாசனிற்கு எம்பி கதிரையுடன் கூட்டமைப்பின் தலைமை பதவியும்!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவினால் ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசனின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக இரா.சம்பந்தன் காலமானதையடுத்து நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசனை நியமிக்க மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்திருந்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் இரா.சம்பந்தனையடுத்து குகதாஸ் அதிவிருப்பு வாக்குகளை பெற்றதன் காரணமாக அவரை தெரிவுசெய்வதற்கு மத்திய செயற்குழு தீர்மானித்திருக்கின்றதெனவம் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.அதேவேளை கூட்டமைப்பின் தலைவராகவும் அவரது பெயரை மாவை முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
திருகோணமலை திரியாய் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட சண்முகம் குகதாசன் அரச அறிவியல் துறையில் முதுநிலை பட்டதாரியாவார்.
நீண்ட காலமாக கனடாவில் வசித்து வந்த சண்முகம் குகதாசன், 2020 ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளைத்தலைவராகியிருந்தார்.
2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சண்முகம் குகதாசன் காலஞ்சென்ற இராஜதவரோதயம் சம்பந்தனுக்கு பின்னர் அதிகூடிய வாக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment