ரணிலுக்கு இடமில்லை:பினாமிகள் போட்டி!
ரணில் விக்கிரமசிங்கவை தவிர்த்து பொதுஜன பெரமுன சின்னத்தின் கீழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்க இன்று தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அதன்படி, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
கட்சி வாய்ப்பு வழங்கினால் தேர்தலில் போட்டியிட தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு திருத்தம் அமைச்சுக்களின் பொறுப்புகளில் இருந்தும் தான் ராஜினாமா செய்துள்ளதாக முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக, விஜயதாஸ ராஜபக்ச உத்தியோகப்பூர்வமாக அறிவித்த நிலையில், தான் வகித்த அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
மறுபுறம் அரகலய போராட்டக்காரர்கள் இணைந்து உருவாக்கியுள்ள மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தபாயவை வீட்டிற்கு அனுப்பிய 2022 காலி முகத்திடல் போராட்டம் உட்பட பல மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தவர்.மக்கள் போராட்டத்தின் செயற்குழு உறுப்பினராகவும் போபகே உள்ளார்.
Post a Comment