10 கோடிகள் ஏன்?



தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி திட்டங்களுக்கு என 5 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரையில் ஒதுக்கப்பட்டுள்ளதாக  செய்திகள் வருகின்றன  என  ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கள் வெளிவர உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமையானது, சில நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதற்காகவே, அவ்வாறு அபிவிருத்திக்கு என கோடிக்கணக்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.


No comments