ரணிலை விட்டால் வழியில்லையாம்?
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாகவே ரணில் பரப்புரைகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில் புதிய சுவரொட்டிகள் வடகிழக்கில் முளைத்துள்ளன.
ராஜபக்ச குடும்பத்தினர் அரசியலில் இல்லாது போயுள்ள நிலையில் ராஜபக்ச குடும்பச்சொத்தான பொதுஜன பெரமுன கட்சியும் முடங்கிவிட்டது.
இந்நிலையில் நாட்டை மீட்டெடுக்க மேற்குலகின் ஆசி பெற்ற தலைவராகத் தம்மை நிலை நிறுத்தி களமிறங்கியுள்ள ரணில் வரப்போகும் தேர்தலில் தமிழ் பேசும் மக்களது வாக்கிற்காக காத்திருக்கிறார்.
இந்நிலையில் ரணிலை ஆதரித்து அவரை ஜனாதிபதியாக்குவதென்ற கங்கணத்துடன் தமிழ் கட்சிகள் களமிறங்கியுள்ளன.
எனினும் முதலில் வடகிழக்கு எங்கும் சிங்க கொடி தாங்கிய சுவரொட்டிகளை ஒட்டிய ரணில் தரப்பு அடுத்த நாள் இந்த நேரத்தில் ரணில் தான் எனும் சுவரொட்டியுடன் களமிறங்கியுள்ளது.
Post a Comment