ஹிருணிகாவிற்கு பிணை
2015 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட மூன்று வருட சிறைத்தண்டனை மற்றும் தண்டனையை எதிர்த்து ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.
இளைஞரை கடத்த சதி செய்தல் மற்றும் உதவி செய்தல், அச்சுறுத்தல், தாக்குதல் மற்றும் மிரட்டல் உட்பட 18 குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் குற்றவாளியாக காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment