சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி: ரியல் மாட்ரிட் 2-0 என்ற கோல் கணக்கில் டோர்ட்மண்டை வீழ்த்தியது

இங்கிலாந்தின் வெம்ப்லி மைதானத்தில் நடைபெற்ற UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி , ஜெர்மனியின் பொருசியா டோர்ட்மண்டை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
விளையாட்டின் முதல் பாதியில் அவர்கள் மிகவும் சிறப்பாக இரு தரப்பினரும் ஆடினர். கோல்களை அடிக்க முயன்றனர். ஆனால் அவர்களால் கோல்களை அடிக்க முடியவில்லை.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் 74வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் டோனி குரூஸின் கோர்னரில் இருந்து அடித்த பந்தை டிஃபென்டர் டானி கார்வஜல் தலையால் இடித்து கோலை அடித்தார்.
அதைத் தொடர்ந்து 83வது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் கிளினிக்கல் ஸ்ட்ரைக் செய்து கோல் அடித்தார்.
சாம்பியன்ஷிப்பின் வரலாற்றில் 15வது வெற்றியை யல் மாட்ரிட் அணி பெற்றது. சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான உதைபந்தாட்ட அணியாக இது திகழ்கிறது.
Post a Comment