சீரற்ற காலநிலை:மரணம் தொடர்கின்றது!
இலங்கையினை அடை மழை மற்றும் மண்சரிவு புரட்டிப்போட்டுள்ளது.
அவிசாவளை, ஹேவாஹின்ன பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 11 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.சீரற்ற வானிலை காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளம் காரணமாக ஹோட்டல் ஒன்றில் சிக்குண்டிருந்த சுமார் 85 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹொரண வாகவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சிக்குண்டிருந்த குழுவினரே இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த குழுவினர் டிரெக்டர் மற்றும் படகு மூலம் மீட்கப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.
இந்தப் பகுதிக்கு சுற்றுலா சென்றவர்கள் மாவக் ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக வெள்ளத்தில் சிக்குண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இரத்தினபுரி, நுவரெலியா, மாத்தறை, குருநாகலை, கேகாலை, கண்டி, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
Post a Comment