கொழும்பி்ல் ஊர்வலமாகச் சென்ற எல்ஜிபிரிகியூ!!
இலங்கையில் எல்ஜிபிரிகியூ பிளஸைச்( LGBTQ+) சேர்ந்தவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.
LGBTQ+ வைக் குறிக்கும் வானவில்லின் நிறங்களைக் கொண்ட கொடிகளை ஏந்தியபடி அவர்கள் ஊர்வலத்தில் சென்றனர்.
காவல்துறையின் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இலங்கையின் சட்டங்கள் இன்னும் ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதுகின்றன, அதை குற்றமற்றதாக்குவதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
Post a Comment