இந்தியத் தேர்தல்: முன்னிலையில் பாஜக கூட்டணி


தற்போதைய நிலவரப்படி இந்தியாவின் பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சிக் கூட்டணி முன்னணியில் உள்ளது. இருந்தாலும் அக்கூட்டணி பெரும்பாண்மையைப் பெறமுடியவில்லை.

80 விழுக்காடு வாக்குகள் பல சுற்றுக்கள் எண்ணப்பட்ட நிலையில் பாரதிய ஜனதாக் கட்சிக் கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 234 இடங்களைப் பெற்றுள்ளது. சுயேட்சைகள் உட்பட ஏனைய கட்சிகள் 18 இடங்களைப் பெற்றுள்ளன.

சில இடங்களில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையான வாக்குகளில் முன்னுக்கும் பின்னுக்கும் மாறி மாறி வித்தியாசத்தில் பாரதிய ஜனதாக் கூட்டணியும் இந்தியா கூட்டணியும் இருப்பதால் 24 சுற்றுக்கள் எண்ணி முடியும் போது கூட்டணிக் கட்சிகள் இடையே இடங்கள் ஏறி இறங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

மீண்டும் மோடி மூன்றாவது தடவையாகவும் பிரதமர் ஆகிறார்.  தனிப்பெரும்பாண்மை இல்லாததால் மோடி நினைத்து போல் பாராளுமன்றில் தீர்மானங்களைக் கொண்டு வரும்போது பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

இதே நேரம் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கட்சி தலைமையிலான தமிழகக் கூட்டணி எல்லா இடங்களிலும் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. 

தற்போதைய நிலவரப்படி புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற்று தமிழகக் கூட்டணி முன்னில்லையில் உள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கட்சி கூட்டணி, பாரதிய ஜனாதாக் கட்சி கூட்டணி, நாம் தமிழர் கட்சி உட்பட ஏனைய கட்சிகள் எந்தவொரு இடங்களிலும் வெற்றிபெற முடியவில்லை.

தேர்தல் முடிவுகளை பார்வையிட கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/index.htm

No comments