தமிழ்நாட்டில் தமிழகக் கூட்டணி 40 இடங்களிலும் முன்னிலை!!


தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கட்சி தலைமையிலான தமிழகக் கூட்டணி எல்லா இடங்களிலும் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. 

தற்போதைய நிலவரப்படி புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற்று தமிழகக் கூட்டணி முன்னில்லையில் உள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கட்சி கூட்டணி, பாரதிய ஜனாதாக் கட்சி கூட்டணி, நாம் தமிழர் கட்சி உட்பட ஏனைய கட்சிகள் எந்தவொரு இடங்களிலும் வெற்றிபெற முடியவில்லை.

தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிட்ட போதும் அவர் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு பின்னிலையில் உள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்ட இடங்களில் வெற்றி பெறாத போதும் அவர்கள் மூன்றாம் நான்காம் இடங்களைத் தக்க வைத்துள்ளனர்.

வாக்கு சதவீதத்திலும் முதலாவது இடத்தில் தி.மு.க வும், இரண்டாவது இடத்தில் அ.தி.மு.க வும், மூன்றாவது இடத்தில் காங்கிரசும் நான்காவது இடத்தில் பா.ஜ.க வும் இதனையடுத்து ஏனைய கட்சிகளும் பெற்றுள்ளன.

No comments