நேட்டோவின் தலைவராகிறார் நெதர்லாந்துப் பிரதமர்!!

இடதுபக்கம் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே, வலது பக்கம் தற்போதைய நேட்டோ செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நேட்டோவின் அடுத்த பொதுச்செயலாளராக பதவியேற்க உள்ளார்.

ரூமேனியா ஜனாதிபதி கிளாஸ் அயோஹானிஸ் கடந்த வார இறுதியில் தனது முயற்சியை வாபஸ் பெறுவதாக இராணுவ கூட்டணிக்கு அறிவித்ததாக அவரது அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்த்துப் போட்டியிட ஒருவரும் இல்லாத நிலையில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நேட்டோவின் அடுத்த பொதுச்செயலாளராக போட்டியின்றி தெரிவாகிறார்.

போட்டியில் எஞ்சியிருக்கும் ஒரே வேட்பாளர் ரூட்டே என்றாலும், உறுப்பு நாடுகளால்  இன்னும் அதிகாரப்பூர்வமாக இதை உறுதிப்படுத்தப்படவில்லை.

தற்போதைய நேட்டோவின் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கின் பதவிக் காலம் அக்டோபரில் முடிவடைகிறது.

இப்பதவிக்கு ஹங்கேரி, ருமேனியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் போட்டியிட்டன.

நெதர்லாந்துப் பிரதமர் கடந்த ஏப்ரலில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடன் பேசியதையடுத்து  ருட்டேவின் முயற்சியை ஆதரிப்பதாக துருக்கி கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் அந்த நேரத்தில் தெரிவித்தது.

நெதர்லாந்துப் பிரதமர் ஹங்கேரி உக்ரைனுக்கு இராணுவ உதவி செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்று ஒப்புக்கொண்டதை அடுத்து, ஹங்கேரி எதிர்ப்பை விலக்கிக் கொண்டது.

நேற்று வியாழக்கிழமை ரூமேனியா இப்போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தமையடுத்து நெர்தலாந்துப் பிரதமர் போட்டியின்றி தெரிவாகிறார்.

No comments