கைப்பற்றப்பட்டது 25 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள் மூடைகள்
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் இன்று வெள்ளிக்கிழமை (07) காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
புத்தளம் கலப்பு கரையோரப்பகுதியில் பீடி இலைகள் மூடைகள் இருப்பதை கண்டு மீனவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதன்போது சுமார் 19 மூடைகளில் பொதிசெய்யப்பட்ட 513 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பீடி இலைகள் சுமார் 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியென மதிப்பிடப்படுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை புத்தள நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக புத்தளம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Post a Comment