நாவலப்பிட்டி வீட்டில் வாகனங்கள் தீக்கிரை!
நாவலப்பிட்டி குருந்துவத்த காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட தொலஸ்பாகை மீனகொல்ல பிரதேசத்தில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு வாகனங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.
தொலஸ்பாகை மீனகொல்ல பிரதேசத்தில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளி மற்றும் சிற்றூர்தி ஆகியன தீப்பற்றி எரிந்துள்ளன.
தீ பற்றியமைக்கான காரணம் இதுவரை கண்டறியபடவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குருந்துவத்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment