தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம்: 40 பேர் பலி!!



இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாட்டில் மது சாராயம் அருந்தியோரில் 40 பேர் இறந்தனர். வாந்தி, வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கால் 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றுப் புதன்கிழமை சென்னையிலிருந்து 250 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரத்தில் இச்சம்பவம் நடந்தது. 

நேற்று காலையில் இருந்தே ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர். நேரம் செல்லச்செல்ல இந்த எண்ணிக்கை அதிகரித்தது. பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மேலும் 100க்கு மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. 

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்தவர்களிடமிருந்து  200 லீட்டர் மெத்தனால் கலந்த மதுபானத்தை கைப்பற்றினர்.

இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். தடுக்க தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூகத்தை சீரழிக்கும் இதுபோன்ற குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என்றும் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அத்துடன்  இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியையும் அறிவித்தார்.


No comments