கென்யாவில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம்: 13 பேர் சுட்டுக்கொலை!!
கென்யாவில் அரசாங்கத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களில் குறைந்தது 13 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தொிவித்துள்ளன.
நேற்று செய்வாய்க்கிழமை அரசாங்கத்தின் புதிய வரித் திட்டங்களை நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் நிறைவேற்றியத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
கோபமடைந்த மக்கள் கென்யாவின் தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள நாடாளுமன்றத்திற்குள் காவல்துறையின் தடையை உடைத்து நுழைந்தனர். நாடாளுமன்றதின் உட்புறத்தில் சேதத்தை ஏற்படுத்தினர். பாராளுமன்றத்தின் ஒரு பகுதியை தீ வைத்துக் கொளுத்தினர். சட்டமன்றத்தின் அதிகாரத்தைக் குறிக்கும் சடங்குச் சின்னம் திருடப்பட்டது.
நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அபாயகரமான குற்றவாளிகளின் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க அனைத்து வழிகளும் பயன்படுத்தப்படும் என கென்யாவின் அதிபர் வில்லியம் ரூட்டோ தனது உரையில் தெரிவித்தார்.
போராட்டத்தை அடக்க இராணுவத்தை அனுப்பினார்.
ஒரே இரவில் பாதுகாப்புப் படையினரால் 13 போராட்டக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டது மனித உரிமைகள் பாதுகாவலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் தேவாலயங்கள் உட்பட பரவலாகக் கண்டிக்கப்பட்டது.
கத்தோலிக்க ஆயர்களும் காவல்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம் என்று காவல்துறையினரிடம் தீவிரமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதே நேரத்தில் போராட்டக்காரர்கள் அமைதியாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
பல வரி உயர்வுகளை உள்ளடக்கிய நிதி வரைப்புக் எதிரான மக்கள் போராட்டங்கள் பல நாட்களாக நடந்து வருகின்றன.
Post a Comment