பொதுவேட்பாளர்:ஈபிடிபியும் கம்பு சுற்றுகிறது!



பொது வேலைத்திட்டத்தில் ஓர் அணியாக செயற்பட முடியாதவர்கள் பொது வேட்பாளர் விடயத்தில் எவ்வாறு ஒன்றுபட முடியும் என ஈபிடிபி கேள்வி எழுப்பியுள்ளது.

வழமை போல ஆளும் தரப்புக்கு கைதூக்கும் ஈபிடிபி இம்முறை ரணிலை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பொது வேட்பாளர் விடயத்திற்கு எதிராக ஈபிடிபி கம்பு சுற்றிவருகின்றது.

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் ரெலோ அமைப்பு கிழக்கில் இருந்து ஓர் அறிக்கையை வெளியிட்டதன் பின்னர் அக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அதற்கு எதிரான கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதிலிருந்து பொது வேட்பாளர் தொடர்பில் ஒரு கட்சிக்குள்ளேயே ஒருமித்த நிலைப்பாடு நிலவவில்லை என்பது புலனாகின்றது.ஒவ்வொரு அணியினரும் ஒவ்வொரு நிலைப்பாடும் அதற்குள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணங்களில் கருத்துக்களும் நிலவிவருகின்றது.

ஆயினும் எதிர்வரும் பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு அதில் ஆசன ஒதுக்கீடுகளை பகிர்வதற்கான ஒரு வியூகமாகவே இந்த பொது வேட்பாளர் என்ற நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.

தத்தமது நலன்களிலிருந்தே அவர்கள் நாடகத்தை அரங்கேற்றி பிழைப்பு நடத்த முனைகின்றனர் ஈபிடிபி தெரிவித்துள்ளது.


No comments