திருத்தமில்லை:மீண்டும் பட்டியல் வெளியீடு?





பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பளை மாவட்ட வைத்தியசாலை மருத்துவ அதிகாரி சின்னையா சிவரூபனை மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டவரென இலங்கை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவித்து 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க முற்படுவதாக மீண்டும் ஒப்புக்கு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன வழமை போல இவ்வாண்டும் நேற்று (03) வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

15 அமைப்புகள் மற்றும் அவர்களது 210 கூட்டாளிகளின் அனைத்து நிதிகள், பிற சொத்துக்கள் மற்றும் பொருளாதார ஆதாரங்கள் அனைத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பு, தமிழர் புனர்வாழ்வு கழகம் , தேசிய தவ்தீஹ் ஜமாத்  ஜமாதே மிலாத் இப்ராஹிம் ஆகிய அமைப்புகளின் நிதிகள் மற்றும் சொத்துக்கள் உட்பட 15 அமைப்புகளின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 113 பேரின் அனைத்து பணம் மற்றும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களுளேயே கடந்த ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டு தற்போது பளை அரச வைத்தியசாலையில் பணியாற்றிவரும் மருத்துவர் சின்னையா சிவரூபனையும் தடை செய்து வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


No comments