ரணிலை தொடர்ந்து சஜித்,அனுர படையெடுப்பு!
ஜனாதிபதி தேர்தலில் வடக்கு தமிழ் மக்களது வாக்குகளை கவர்வதற்கு ரணில் தொடர்ச்சியாக படையெடுத்து வரும் நிலையில் அடுத்து சஜித் பிறேமதாசா மற்றும் அனுரகுமார திசநாயக்க ஆகியோர் புறப்பட்டுள்ளனர்.
அவ்வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் ஞாயிறுக்கிழமை முதல் வியாழன் வரையாக ஒருவார காலத்திற்கு வடக்கில் தங்கியிருக்கவுள்ளார்.பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் முகமாக அவரது விஜயம் அமையும் என கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடம்பெறும் நிகழ்வுகளிலும் சஜித் பிறேமதாசா பங்கேற்கவுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சஜித்தின் இந்த விஜயம் முக்கிய விஜயமாக அமையும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதேவேளை 13ம் திகதி யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களிடையே தனது வடக்கு விஜயம் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார்.
அதேவேளை மக்கள் முன்னணி சார்பு ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவும் 11ம் திகதி செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.
Post a Comment