கடல்வழியே தாயகம் வந்தோர் கைது!
தமிழகத்திலிருந்து கடல்வழியாக தலைமன்னார் பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் இன்று திங்கட்கிழமை(3)காலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு, தலைமன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
ஐகதான ஜந்து பேரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சென்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையிலே ஜவரும் படகு மூலம் இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த நிலையில்; கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட பேரும் விசாரணைகளின் பின்னர்; மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment