கிளிநொச்சி அபிவிருத்தி:பார் மேலே பார்!



கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்தினுள் மட்டும் ஆறு முதல் எட்டுவரையாக புதிய மதுபானச்சாலைகள் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி திறக்கப்பட்டுள்ளது.முன்னாள் இந்நாள் அரசியல்புள்ளிகளது பினாமிகள் பேரில் மதுபானச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.அதேவேளை மேலும் பல புதிய மதுபானச்சாலைக்கிற்கான அனுமதிக்காக காத்திருப்பதாக கூறப்படுகின்றது.

இதனிடையே கிளிநொச்சி தர்மபுரத்தில் அமைந்துள்ள பிராந்திய மதுபானப் புனர்வாழ்வு நிலையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெறுகின்றவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.அவர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் அவர்களுடைய பொழுது போக்கிற்காக கட்சி நிதியில் இருந்து தொலைக்காட்சி ஒன்றினையும் வழங்கி வைத்துள்ளதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments