தமிழர் பயம்:பொதுவேட்பாளராக ரணில்!



ராஜபக்சக்களது கூட்டினை முன்வைத்து தேர்தலில் களமிறங்கினால் வடகிழக்கு வாக்குகள் கிட்டாதென்ற அச்சத்தின் மத்தியில் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவுக்கு அறிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன, சிறுபான்மை கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைக்க வேண்டியிருப்பதால், தான் நிச்சயமாக பொது வேட்பாளராக போட்டியிடுவேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனிடையே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட மாட்டாது என ராஜபக்சக்களது நெருங்கிய சகாவான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ;கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் இருக்கின்றனர்.

எனினும் பொதுஜன பெரமுனவின் பல முக்கிய அமைச்சர்களும் சிரேஷ்ட தலைவர்களும் பல கட்சிகளுடன் இணைந்து விரைவில் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் பொது கூட்டணியொன்றை உருவாக்கவும் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் தெரியவருகிறது.

இந்நிலையிலேயே பெர்து கூட்டணியின் பொதுவேட்பாளராக களமிறங்கப்போவதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.


No comments