ஜெய் சந்திப்பு:நாமல்,கஜன்,மகிந்த…!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்ததுடன் மஹிந்தவை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைவதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சந்திப்பில் இந்தியா இலங்கை இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் தற்போதைய முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது. அவரது தொடர்ச்சியான ஆதரவுக்காக எமது பாராட்டுகள்” என்றும் ஜெய்சங்கர்; கூறியுள்ளார்
இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளார்.
வுழமை போல சந்திப்பில் மாகாணங்களின் அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திப்பில்; இரா.சாணக்கியன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறீதரன், சி.வி.விக்னேஸ்வரன், எஸ்.அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் அமரும் நபர் இந்தியாவுக்கு சாதகமானவராக இருக்க வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணிவருபவர். அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாக வேண்டுமென்பது இந்தியாவின் விருப்பமாக உள்ளது.

Post a Comment