தாக்குதல் தனிப்பட்டதே:காவல்துறை!



யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

எனினும் தாக்குதல் தனிப்பட்டதொரு பிரச்சினையாக அமைந்திருந்ததாக காவல்துறை விளக்கமளித்துள்ளது.

அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது.

சம்பவத்தின் போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

விசாரணைகளையடுத்து , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மூவரை இலங்கை காவல்துறை கைது செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து , சந்தேகநபர்கள் மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இந்நிலையில் தனிப்பட்ட காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


No comments