நிமல் கொலை:நெப்போலியனிற்கு கண்டம்!



இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரு கொலைகள் மற்றும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவரின் படுகொலை தொடர்பான விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களை அறிந்தவர்களிடம் பிரித்தானியாவின் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறையினர் உதவி கோரியுள்ளனர்.

2000களின் முற்பகுதியில் இலங்கை உள்நாட்டுப் போருடன் தொடர்புடைய போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறையினரே தங்கள் விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களை அறிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு கோரியுள்ளனர்.

2001ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பேரணியின் போது ஈபிடிபியினால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு பொது மக்கள் கொல்லப்பட்டனர். அதற்கு முன்னதாக ஊடகவிலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் அரங்கேறியிருந்தது 

தீவகத்தின் வேலணையில் நடைபெற்ற சம்பவத்தி.ல் எம். கே. சிவாஜிலிங்கம் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் காயமடைந்திருந்தனர்.

கூட்டமைப்பின் தேர்தல் பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 21 நவம்பர், 2023 அன்று தெற்கு லண்டனில் கைது செய்யப்பட்ட 60 வயது நபர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 2022 பெப்ரவரியில் கைது செய்யப்பட்ட 48 வயது நபரான ஈபிடிபி முக்கியஸ்தரான நெப்போலியனும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


No comments