கார்கிவ் நகருக்குள் நுழைந்தது ரஷ்யா!!
உக்ரைனின் கார்கிவ் நகரின் பகுதிக்குள் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை ரஷ்யப் படைகள் முன்னேறியுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்தது.
ஒரு பாதுகாப்பு மண்டலத்தை நிறுவும் முயற்சியில் ரஷ்ய இராணுவம் இன்று வெள்ளிக்கிழமை அப்பகுதியில் 10 கிலோமீட்டர் வரை முன்னேறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என உக்ரைன் தெரிவித்தது.
ரஷ்யப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்க உக்ரேனியப் படைகள் போராடி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த முன்னேற்றத்திற்கு கவச வாகனங்கள் சகிதம் பலத்த எறிகணை வீச்சுக்களை நடத்தியவண்ணம் ரஷ்யப்படைகள் முன்னெறிவருவதாக உக்ரைனை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.

Post a Comment