அமொிக்காவின் எம்.கியூ-9 ரீப்பர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹூதிகள்
யேமனில் அமெரிக்காவின் ஆளில்லா விமானமான எம்.கியூ-9 ரீப்பர் வேவு விமானத்தை ஹூதி அமைப்பினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
யேமனின் மாரிப் மாகாணத்தில் சட்டவிரோதமாக பறந்த போது வான் ஏவுகணை மூலம் இந்த வேவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதி இராணுவ செய்தி தொடர்பாளர் ஜெனரல் யாஹ்யா சாரி தெரிவித்தார்.
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின்னர் அதன் பகுதிகளை நிலத்தில் காணப்படும் காணொளிகள் எக்ஸ் தளம் உட்பட பல ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை குறித்து அமெரிக்கா எதுவித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
யேமனில் அமெரிக்காவின் எம்.கியூ-9 ரீப்பர் விமானம் ஹூதிகளால் ஏற்கனவே ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை இங்கே நினைவூட்டத்தக்கது.
இந்த விமானத்தை உருவாக்க 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும். 50 ஆயிரம் அடி உயரத்தில் 24 மணி நேரம் வானில் தொடர்ச்சியாகப் பறந்து வேவுத் தகவல்களை சேகரிக்கும் வலிமை படைத்தது.
❗Las fuerzas yemeníes🇾🇪 derribaron otro dron estadounidense🇺🇸 MQ-9 "Reaper". pic.twitter.com/j7yA4krhdH
— PalestinaVENCERA 🇵🇸 (@Darwin_f1978) May 17, 2024
Post a Comment