கட்சி பதிவு சரி:ஆனால் இரட்டை பிரஜாவுரிமை வேண்டும்!



இலங்கை பிரஜைகள் அல்லாதவர்கள் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு சட்டரீதியான தடை எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

“பிரஜை அல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதை மட்டும் இலங்கைச் சட்டம் தடுக்கிறது, அதே நேரத்தில் குடிமகன் அல்லாதவர்கள் தேர்தலில் வாக்களிப்பதையும் சட்டம் தடை செய்கிறது” என்று தேசப்பிரிய தெரிவித்துள்ளார்..

புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் இரு கட்சிப்பதிவுகளை கொள்வனவு செய்து வைத்துள்ளதுடன் தேர்தல் களத்திற்கு காத்திருப்பதான அறிவிப்பின் மத்தியில் மகிந்த தேசப்பிரியவின் கருத்து கவனத்தை பெற்றுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இலங்கை குடியுரிமையினை கொண்டிருக்காத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இழந்துள்ளார்.

இந்நிலையில் எம்.ஏ.சுமந்திரனிடம் தம் வசமுள்ள இரு கட்சிகளில் ஒன்றை ஒதுக்கி வழங்கவுள்ளதாக முன்னணி தமிழ்புலம்பெயர் வர்த்தகர் ஒருவர் தெரிவித்த கருத்து சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.

அவ்வேளையில் இலங்கை பிரஜைகள் அல்லாதவர்கள் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு சட்டரீதியான தடை எதுவும் இல்லை “பிரஜை அல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதை மட்டும் இலங்கைச் சட்டம் தடுக்கிறது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.



No comments