கப்பலின் நாலு சில்லிலும் காற்றில்லை!பெரும் பிரச்சாரங்களுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கப்பல் சேவையை கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், சில சட்டரீதியான அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டதுடன் நாளை மே 17 வரையில் செயற்பாடு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தற்போது ஒத்தி வைக்கப்பட்டு மே 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே பயணத்தை மேற்கொள்வதற்காக பதிவுகளை மேற்கொண்ட பயணிகள் மே19 அல்லது அதற்குப் பின்னர் தாம் விரும்பிய திகதிகளில் பயணிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால் தொடர்பு கொண்டு கட்டணத்தினை பெற்றுக்கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.


ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து ஆலோசித்துக் கொண்டிருப்பதாக, அமெரிக்க தூதுவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்திருந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், த.சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரை சந்தித்துள்ளார்.

சந்திப்பு நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் போருக்கு பின்னான 15 வருடங்களில் சகல வழிகளிலும் ஏமாற்றங்களை சந்தித்து விரக்தியடைந்துள்ள நிலையில், தங்களுடைய கொள்கைகளை நிலைநிறுத்தவே முடிவை எடுத்துள்ளதாகவும் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா தீர்மானங்களாலும் எந்தவொரு பயனும் இல்லை. இந்த நிலையில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கி தங்கள் கொள்கையை நிலை நிறுத்தவேண்டும் என்பதற்காக பொதுவேட்பாளர் தொடர்பாக தற்போது பேசிக் கொண்டிருக்கின்றோம் என விளக்கியுள்ளார்.

மேலும் தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை மத அமைப்புக்களை சிவில் சமூகங்களை இதன் மூலம் ஒன்றிணைக்கலாம் என தாங்கள் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


No comments