ரணில் கேட்கவில்லை:15ம் திகதி மாற்றம்?

 


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ( வெற்றி வேட்பாளரை நியமிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் தேர்தலில் போட்டியிட பொதுஜன பெரமுனவின் ஆதரவை இதுவரை கோரவில்லை என்றும் கூறினார்.

இதனிடையே எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் சில தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திகளால் இலங்கை அரசியல் களத்தில் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆனால், ஜூன் இரண்டாம் வாரம் வரை தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படாது .புதிய மின்சாரச் சட்டத்தை ஜூன் முதல் வாரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதால் அதற்கு முன் எக்காரணம் கொண்டும் நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது .

அதன் பின்னரே எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும். என்றாலும், முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவது குறித்து அரசாங்கம் இதுவரை எவ்வித கலந்துரையாடல்களையும் நடத்தவில்லை .

No comments