ஜனாதிபதி வேட்பாளர்:சிந்திக்கிறார் வேலன் சுவாமிகள்!

 


ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுவேட்பாளர் தொடர்பில் கட்சிகள் மும்முரமாக தமது அரசியல் கடைகளை விரித்துவருகின்றன.

இந்நிலையில் தமிழர் சார்பில் பொதுவேட்பாளராக களமிறங்குவது தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசம் தேவை என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் பொது வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில தவத்திரு வேலன் சுவாமிகளிடம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகளை பொது வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் தன்னை வேட்பாளராக களமிறங்குமாறு விக்னேஸ்வரன் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசம் தேவை என தவத்திரு வேலன் சுவாமிகள் கோரியுள்ளார்.

எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்றும் தவத்திரு வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார்.


No comments