பாகிஸ்தானில் மின்னல், மழை காரணமாக 50 பேர் வரையில் பலி!!


மின்னல் மற்றும் கனமழை காரணமாக பாகிஸ்தான் முழுவதும் கடந்த நான்கு நாட்களில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் தென்மேற்கு கோதுமை அறுவடை செய்யும் விவசாயிகள் மீது மின்னல் தாக்கியதில் சிலர் உயிரிழந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை அவசரகால நிலையை அதிகாரிகள் அறிவித்தனர். 

பஞ்சாபில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 21 பேரும், ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மேலும் 21 பேரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைநகர் இஸ்லாமாபாத்திலும் மழை பெய்தது மற்றும் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

மழையால் வடமேற்கு மற்றும் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் டஜன் கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன.

வடமேற்கு நகரமான பெஷாவர் மற்றும் பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கின.

கடுமையான புயல்களால் மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதால், அவசர சேவைகளை விழிப்புடன் இருக்குமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) கேட்டுக் கொண்டுள்ளது.

வியாழனன்று பெய்யும் அதிக மழை வயல்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம் எச்சரிக்கப்பட்டுள்ளது.


No comments