டிரம்பின் வழங்க விசாரணையின்போது ஒருவர் தீக்குளிப்பு!!


அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான ஹஷ் பண வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நியூயார்க் நீதிமன்றத்திற்கு நேர் எதிரே ஒருவர்

தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நபர் தன்னை எரியூட்டும் காட்சிகளை தொலைக்காட்சி கேமராக்கள் காட்சியைப் பதிவு செய்தன. குறித்த நபர் டிரம்பை குறிவைத்ததாகத் தெரியவில்லை என்று நியூயார்க் காவல் துறை தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் குற்றவியல் விசாரணை தற்போது நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு நேர் எதிரே உள்ள கலெக்ட் பாண்ட் பூங்காவில் குறித்த நபர் துண்டுப்பிரசுரங்களை வீசிவிட்டு தீக்குளித்துள்ளார்.

அங்கிருந்தவர்களால் அவர் மீது பற்றி தீ அணைக்கப்பட்டு பலத்த எரிகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிற்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தன்னைத்தானே எரித்துக் கொண்டதற்கான காரணங்கள் தெளிவாக இல்லை.

அந்த நபர் டிரம்பையோ அல்லது விசாரணையில் ஈடுபட்ட மற்றவர்களையோ குறிவைத்ததாகத் தெரியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

2016 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர், அவரது அப்போதைய வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் ஆபாச நடிகர் ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு வழங்கிய $130,000 தொகையை மறைத்ததாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஸ்டோர்மி டேனியல்ஸுக்கும் ட்ரம்புக்கும் ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததாக பாலியல் உறவை மூடிமறைக்க இப்பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

No comments