கனடா மோகம் ஓயவில்லை!
வடகிழக்கு தமிழர் தாயகத்திலுள்ள இளம் சமூகத்தினரிடையே வெளிநாட்டு மோகம் ஓய்ந்த பாடாக இல்லாதுள்ளது.
வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து கோடிகளில் மோசடிகளில் ஈடுபடுவது தொடர்கதையாகியுள்ளது.
இந்நிலையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களிடம் சுமார் 2 கோடியே 50 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்து, கொழும்பில் தலைமறைவாகி இருந்த பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களை பெற்று தருவதாகவும், சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரங்களை செய்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலரிடம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார்.
மோசடி தொடர்பில் குற்றத்தடுப்பு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை கொழும்பில் பதுங்கியிருந்த நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
குறிப்பாக அண்மைக்காலங்களில் கனடா உள்ளிட்ட நாடுகளிற்கு அழைத்து செலவதாக தெரிவித்தே பாரிய மோசடிகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment