வன்னி பார் பெமிட்:ஆறு கோடி!

 


ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஏதுவாக சுமார் ஆறுகோடி  பெறுமதியான மதுபான சாலை அனுமதி;ப்பத்திரங்களை பெற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயர்கள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

வுடமாகாணத்தில் மட்டும் எட்டு மதுபானச்சாலைகளிற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதுடன் பூநகரி மற்றும் கிளிநொச்சியில் மதுபான நிலையங்கள் தனியாரிற்கு வழங்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மத்திய மாகாணத்தை சேர்ந்த  எதிர்க்கட்சி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான இரண்டு மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுள்ளதாக தகவல்; வெளியாகியுள்ளன.

அந்த இரண்டு மதுபான அனுமதிப்பத்திரங்களையும் சிங்கள வர்த்தகர்கள் இருவருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகின்றது.

அரசாங்கத்தில் இணைவதாக உறுதியளித்து இரண்டு மதுபான அனுமதிப்பத்திரங்களையும் அவர் பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

தேர்தலில் ஆதரவைப் பெறுவதற்காக, எதிர்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு, 200 மதுபான உரிமங்களை, அரசாங்கம் வழங்கியுள்ளதாக சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் அனைத்து மதுபானச்சாலை அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்யவுள்ளதாக சஜித் பிறேமதாசா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments