அரச குடும்பத்திற்கு எதிராக பரவும் தகவலால் சர்ச்சை!!


பிரித்தானிய இளவரசர் வில்லியம் குறித்த தகவல் தீயாய் பரவி வருகிறது. அதாவது, இளவரசர் வில்லியம் மற்றும் கேத் மிடில்டனின் முன்னாள் நெருங்கிய தோழி ரோஸ் ஹான்பரி இருவரும் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக பரவும் தகவல்தான் இப்போது விவாதப்பொருளாகி உள்ளது.

இந்த தகவலை ஸ்டீபன் கோல்பர்ட் என்பவர் கிளப்பிவிட்டுள்ளார். நேற்று முன்தினம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஸ்டீபன், தன்னிடம் இங்கிலாந்து அரச குடும்பத்தைப் பற்றிய கவலை தரும் செய்தி இருப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இங்கிலாந்தின் இளவரசி கேத் மிடில்டன் வெளியில் வராததால், வருங்கால மன்னர் வில்லியமுக்கும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று இணையவாசிகள் யூகிக்கிறார்கள். அந்த பெண் யார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும் என நினைக்கிறேன். வில்லியம் மற்றும் ரோஸ் ஹான்பரி இடையே தொடர்பு இருப்பதாக 2019 முதல் வதந்திகள் உள்ளன. பின்னர் ரோஸ், வில்லியமின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான டேவிட்டை திருமணம் செய்துகொண்டார்" என்றார்.

இவ்வாறு பழைய புரளியை மீண்டும் கிளப்பிவிட்டதால், கோல்பர்ட் மற்றும் ரோஸ் ஹான்பரி இருவரின் பெயர்களும் எக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆனது. ரோஸ் ஹான்பரி மற்றும் அரச குடும்பத்துடனான அவரது தொடர்பை பற்றி பலர் கேட்கத் தொடங்கினர்.

இளவரசர் வில்லியம் மற்றும் ஹான்பரி ஆகியோருக்கு இடையே ஒரு காதல் கதையை இணையவாசிகள் கட்டவிழ்த்துவிடலாம் என அரச குடும்பமும் கருதுகிறது.

இந்த தகவல் தொடர்பாக ஹான்பரி, கேத் மிடில்டன் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோரிடமிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலோ அல்லது மறுப்போ வெளியிடப்படவில்லை. இருப்பினும், வில்லியமின் சட்டக்குழுவினர் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அவை ஆதாரமற்றவை என்றும், தீங்கு விளைவிக்கும் நோக்கில் பரப்பப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளனர். 

No comments