எங்களைக் காப்பாற்றுங்கள்: ரஷ்ய - உக்ரைன் போர்க்களதிலிருந்து இந்தியர்கள்!!


இந்தியாவின் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட குழு ரஷ்யாவுக்குச் சென்றபோது 7 பேரும் வலுக்கட்டாயமாக ரஷ்ய - உக்ரைன் போரில் முன்களத்தில் போராட வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிலிருந்து சென்ற குழு ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது. இதில் ஒரு பேசுகிறார்.

நாங்கள் 7 பேரும் புத்தாண்டைக் கொண்டாட ரஷ்யா சென்றோம்.  பின்னர் பெலாஸுக்குச் சென்றோம். எங்களை முகவர் ஒருவர் சுற்றுலா நுழைவுச்சீட்டு மூலம் அழைத்துச் சென்றார். பெலாஸுக்கு அழைத்துச் சென்ற முகவர் எங்களை நடுவழியில் விட்டு விட்டு ஓடிவிட்டார்.

பின்னர் பெலாரஸில் ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட ஆவணங்களில் கையொப்பமிடுமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்தினர். இல்லை என்றால் 10 ஆண்டுகள் சிறை என அச்சுறுத்தினார்கள்.

தங்களை இந்தியாவுக்கு திருப்பி எடுக்க உதவுமாறு இந்திய அரசாங்கத்திற்கு இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments