137 பேரைக் கொன்ற தாக்குதலாளிகளை நீதிமன்றில் முன்னிறுத்தியது ரஷ்யா


ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ குரோகஸ் சிற்றி ஹால் இசை அரங்கில் தாக்குதல் நடத்தி 137 பேரைக் கொன்ற நான்கு பேர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இரண்டு பேர் வளைந்த நிலையில் நடத்தியபடி காவல்துறையினர் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டனர். மூன்றாவது சக்கர நாற்காலில் அழைத்து வரப்பட்டார்.

தாக்குதலை நடத்தியவர்கள் தசகிஸ்தான் குடியுருமை பெற்ற டாலர்ட்ஜோன் மிர்சோயேவ், சைதாக்ரமி முரோதலி ரச்சபலிசோடா, ஷம்சிடின் ஃபரிதுனி மற்றும் முஹம்மதுசோபிர் ஃபைசோவ் என்ற நால்வரின் பெயரைகளையும் ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்டனர். 

தாக்குதலாளிகள் ரஷ்ய தலைநகரில் உள்ள பாஸ்மன்னி மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துவந்த காணொளியை ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்டனர்.

ரஷ்யா விசாரணைகளைத் தொடங்க முன்னரே தாக்குதலை ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐ.எஸ்-கே என்ற பயங்கரவாத அமைப்பே நடத்தியதாக முதலில் அமெரிக்கா கூறியது. பின்னர் மேற்குலக நாடுகளின் ஊடகங்களும் இதனையே பரப்புரைகளாச் செய்யதன. 

தாக்குதலுக்குப் பின்னர் ஐ.எஸ்-கே என்ற அமைப்பும் ரெலிகிராமில் பொறுப்பேற்றது. இரண்டு நாட்கள் கடந்த நிலையில் சம்பவ இடத்தில் நேரலையில் பதிவு செய்யப்பட்ட காணொளியையும் வெளியிட்டது.

இந்த உரிமைகோரலை ரஷ்யா ஏற்க மறுக்கிறது. இத்தாக்குதலுக்கும் உக்ரைனுக்கும் ஏதோ ஒருவகையில் தொடர்பு இருப்பதாக நம்புகிறது. தாக்குதலாளிகள் தாக்குதலை நடத்திவிட்டு உக்ரைனுக்குள் தப்பிச் செல்ல முற்பட்டபோது எலைப் பகுதியிலிருந்து 150 கிலோ மீற்றர் தூரத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஏற்கனவே ஐ.எஸ் அமைப்பை முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சியில் சி.ஜ.ஏ அமைப்பால் உருவாக்கப்பட்டது. இதன் ஒரு அங்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு  இஸ்ரேல்  நிதியளித்தும் பயிற்சி அளித்தும்  சிரியாவில்  பசீர் அல் அதாத் அரசாங்கத்திற்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகிறது. ஐ.எஸ் அமைப்பின் ஊடாக நாட்டுக்குள் தாக்குதல்களை நடத்தி ஐ.எஸ் அமைப்பை அழிப்பதாகவும் அமைதியை ஏற்படுத்துவதாகவும அந்த நாட்டுக்குள் அமெரிக்கப் படைகள் நுழைவதற்கு ஐ.எஸ் அமைப்பை ஒரு கருவியா அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. அவ்வாறு சியாவில் எண்ணெய் வயல்களை கைப்பற்றி மசகு எண்ணெய்யை அமெரிக்காவுக்கு கப்பல் கப்பலாக அனுப்பி வைக்கிறது. 

சிரியாவில் குர்திஸ்தான் ஆயுதப்படைகளின் இணைந்து ஐ.எஸ் அமைப்பை அழிப்பதாகக் கூறிய அமொிக்கா அசாத்துக்கு எதிரான தாக்குதல்களை நடத்தியது. குர்திஸ்தானின் ஆயுதப் படைகளில் தலைவராக முன்னாள் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் ஒருவரை அமெரிக்கா அண்மையில் நியமித்திருந்தது.

இதேபோன்ற மத்திய ஆபிரிக்க நாடான நைஜரில் ஐ.எஸ் அமைப்பதை அழிப்பதாகவும் அமைதியை ஏற்படுத்துவதாகவும் கூறிக்கொண்டு யுரேனியத்தை திருடிக்கொண்டிருந்தது அமெரிக்கா என்பதும் உலகறிந்த உண்மைகளாகும்.

No comments