ஏதென்ஸ் உயிரியல் பூங்காவில் பிறந்த அரிய வகை நீர்யானை


கிறீஸ் ஏதென்சில் உள்ள அட்டிகா விலங்கியல் பூங்காவில் நீர்யானை ஒன்று பிறந்தது.  இது ஒரு ஆண் ஹிப்போ கன்று என அறிவிக்கப்பட்டது. இந்த விலங்கியல் பூங்காவில் இது ஒரு முதல் பிறப்பாகும். விலங்கியல் பாதுகாவலர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில் இந்த அரிதான பிக்மி வகை நீர்யானை அழிந்து வரும் இனமாகும். 

ஹிப்போ கன்று நேற்றுச் செவ்வாய்க்கிழமை (19) பிறந்தது. தற்போது அதன் எடை 7 கிலோகிராமாகும். நீர்யானை இப்போது தனது பெற்றோர்களான லிசி மற்றும் ஜமால் ஆகியோருடன் இணைகிறது.

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் பிக்மி ஹிப்போக்களை அழிந்து வரும் உயிரினமாக பட்டியலிட்டுள்ளது. சுமார் 2,000 முதல் 2,5000 வரை காடுகளில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு ஆபிரிக்காவில் உள்ள சதுப்பு நிலங்களும் மழைக்காடுகளும் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களாகும்.

ஹிப்போக்களின் ஒவ்வொரு பிறப்பும் மிகவும் முக்கியமானது. இனப் பெருக்கத்திற்கு பெரும் சிக்கலாக இருப்பது ஆண் இனங்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ளமையே.


No comments