8.2 மில்லியன் யூரோக்களை திருடிய பெண் சரணடைந்தார்
வடக்கு யேர்மனியில் நகரமான பிறேமனில் உள்ள பணப் பரிவர்த்தை நிறுவனத்தில் இருந்து கிட்டத்தட்ட 8.2 மில்லியன் யூரோக்களை திருடியதாகக் குற்றச்சாட்டப்பட்ட நபர் துருக்கியிலிருந்து விமான மூலம் திரும்பி வந்து காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.
31 வயதான பெண் ஒருவர் தனது வழக்கறிஞர் மூலம் திரும்பப் போவதாக அறிவித்தார். நேற்று செவ்வாய்கிழமை காலை பிறேமென் விமான நிலையத்திற்கு வந்தவுடன் உடனடியாக காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
மேலதிக விசாரணைகள் மற்றும் விசாரணைகள் தொடர்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பெண் பணப் பரிமாற்ற நிறுவனத்தில் பணத்தைப் பொதி செய்து பாதுகாப்பாக அனுப்பும் பொறுப்பை ஏற்றிருந்தார்.
குறித்த பெண் மே 21, 2021 அன்று பணம் நிரப்பப்பட்ட பல பைகளைத் திருடினார் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் தேடப்பட்டு வந்தாா. குறித்த குற்றவாளியில் கூட்டாளி ஒருவர் ஏற்கனவே பிறேமன் மாவட்ட நீதிமன்றத்தால் திருட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். திருட்டுக்கு உதவியதற்காக 2022 இல் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Post a Comment