எனக்கு புற்றுநோய் உள்ளது - வேல்ஸ் இளவரசி கேத்தரின்
வேல்ஸ் இளவரசி கேத்தரின் என்று அழைக்கப்படும் கேற் மிடில்டனுக்கு (வயது 42) புற்று நோய் இருப்பதை வெளிப்படையாக அவரே காணொளி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனவரி மாதம் அவருக்கு வயிற்று அறுவை சிகிச்சை செய்தபோது, புற்றுநோய் இருப்பது தெரியவில்லை என்று கேத்தரின் கூறினார்.
சத்திரசிகிற்சைக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது கேற்றுக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது என்றார்.
இதைத் தொடர்ந்து எனது மருத்துவக்குழு கீமோதெரபியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். அந்த சிகிற்சையின் ஆரம்பகட்டத்தில் நான் இருக்கிறேன் என்று இளவரசி கூறினார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைத்துப் பார்ப்பதாகக் கூறினார். புற்று நோயை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் நம்பிக்கையை இழக்காதீர்கள் நீங்கள் தனியாக இல்லை என்றார்.
ஜனவரி மாதம் தனது அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வருவதற்கு நேரம் எடுத்துக்கொண்டதாகவும், எங்கள் இளம் குடும்பத்தின் நலனுக்காக இதை தனிப்பட்ட முறையில் செயல்படுத்தவும் நிர்வகிக்கவும் எங்களால் முடிந்த அனைத்தையும் வில்லியமும் நானும் செய்து வருகிறோம். இதேநேரம் பிள்ளைகளுக்கும் பொருத்தமான முறையில் விளக்க எங்களுக்கு நேரம் எடுத்தது என்றார்.
இந்த அறிவிப்புக்கு முன் மன்னர் மற்றும் இராணிக்கும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மன்னர் சார்லஸும் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். மன்னர் சார்லஸ் மற்றும் கேத்தரின் ஒரே நேரத்தில் லண்டன் கிளினிக் தனியார் மருத்துவமனையில் சுருக்கமாக சிகிச்சை பெற்றனர். கேத்தரினுக்கு அங்கு வயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது மற்றும் சார்லஸுக்கு புற்றுநோக்கு சிகிற்சை அளிக்கப்பட்டது.
கேத்தரின் பேசும் தைரியத்திற்காக மன்னர் மிகவும் பெருமைப்படுகிறார் பக்கிங்ஹாம் அரண்மனையின் செய்தித் தொடர்பாளர் கூறினார். கடந்தவாரம் முழுவதும் அன்பு மருமகளுடன் நெருக்கிய தொடர்பில் மன்னர் இருந்தார் என்று பக்கிங்ஹாம் அரண்மனையின் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

Post a Comment