இத்தாக்குதலுடன் உக்ரைன் தொடர்புபட்டால் தலைமையை ரஷ்யா அழிக்கும்


ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிற்கு புறநகரில் அமைந்துள்ள குரோகஸ் சிற்றி ஹால் மீதான தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் கண்டு பிடிக்கப்பட்டால் உக்ரைன் தலைமைய ரஷ்யா அழித்துவிடும் என முன்னாள் ரஷ்ய அதிபரும் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வடேவ் கூறினார்.

இத்தாக்குதலுடன் உக்ரைன் ஆட்சியாளர்கள் தொடர்புபட்டால் அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக கண்டுபிடிக்கப்பட்டு இரக்கமின்றி அழிக்கப்பட வேண்டும் என்று டெலிகிராம் செய்தி இடுகையில் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தகைய குற்றத்தைச் செய்த அரசின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

உக்ரைன் தாக்குதலில் ஈடுபட்டது என்ற கருத்தை ஆதரிக்க மெட்வெடேவ் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.

இந்த தாக்குதலில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments